கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இன்று தேர்வு முடிவு

கோவில்பட்டி, ஜூலை 12: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தேர்வு முடிவு இன்று (12ம் தேதி) வெளியிடப்படுகிறது. கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி கடந்த 2011-12ம் கல்வியாண்டு முதல் தன்னாட்சி அந்தஸ்து பெற்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த முதலாமாண்டு, 2ம் ஆண்டு, 3ம் ஆண்டு பி.இ., பி.டெக். எம்.இ. தேர்வு முடிவு இன்று (12ம் தேதி) கல்லூரியில் வெளியிடப்படுகின்றன. இத்தேர்வு முடிவுகளை www.nec.edu.in என்ற கல்லூரியின் இணையதளத்தில் இன்று (12ம் தேதி) மாலை 4 மணி முதல் தெரிந்து கொள்ளலாம். மேலும் அரியர் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யவும், விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் வரும் 20ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வழங்கலாம். இத்தகவலை கல்லூரி முதல்வர் காளிதாசமுருகவேல் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: