ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட ஒரு டன் அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

கோவில்பட்டி, மே 24: கோவில்பட்டியில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட ஒரு டன் எடையிலான அழுகிய மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நத்நூரி உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகுணா, கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் அச்சையா ஆகியோரின் ஆலோசனைப்படி உணவு பாதுகாப்பு அலுவலர் முருகேசன் கோவில்பட்டி பசுவந்தனை ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள ஒரு மாம்பழங்கள் கிடங்கில் ஆய்வு செய்தார். அப்போது அந்த கிடங்கில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட ஒரு டன் எடையிலான மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அழுகிய அந்த மாம்பழங்கள் நகராட்சி லாரியில் ஏற்றப்பட்டு கோவில்பட்டி அருகே சிதம்பராபுரத்தில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.
Advertising
Advertising

Related Stories: