துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சியை முடக்க நினைத்தால் போராட்டம்

தூத்துக்குடி, மே 21: துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தவிடாமல் முடக்க நினைத்தால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு போராட்டத்தில் இறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான கிருஷ்ணமூர்த்தி, தலைமையிலானவர்கள் தங்களுக்கு போலீசார் அனுப்பியுள்ள இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் தொடர்பான சம்மனுடன் தூத்துக்குடி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் அளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து அறவழியில் போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

Advertising
Advertising

ஆனால் சிஆர்பிசி 107 பிரிவின் கீழ் அதிகாரிகள் எங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். போராடக்கூடாது என்று அதிகாரிகள் நினைக்கிறார்களா? என எண்ணத் தோன்றுகிறது. போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தக்கூட எங்களுக்கு உரிமை இல்லையா?. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கை தொடர்ந்தால் எங்கள் கூட்டமைப்பு போராட்டத்தை முன்னெடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: