மழை பெய்ய வேண்டி எட்டயபுரத்தில் முளைப்பாரி ஊர்வலம்

எட்டயபுரம், மே 9:  எட்டயபுரம் கீழவாசல் ஆர்சி தெருவில் உள்ள தேவிகாளியம்மன் கோயில் கொடைவிழா நேற்று முன்தினம் துவங்கியது. முதல்நாள் பால்குடம் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அக்கினிசட்டி வளர்த்தல், கும்பம் அழைப்பு சாமவேட்டை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. அதனை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். நேற்று காலை அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. முன்னதாக அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. மாலையில் பக்தர்கள் கடந்த 8 நாட்களாக வளர்த்த முளைப்பாரியை மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் வேண்டி ஊர்வலமாக எடுத்து வந்து தெப்பக்குளத்தில் கரைத்து வழிபட்டனர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: