தேசிய தடகள போட்டி தூத்துக்குடி வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்

தூத்துக்குடி, பிப். 12:  தேசிய தடகள போட்டியில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் பிரிவில்  குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டியில் தூத்துக்குடியைச் சேர்ந்த வீராங்கனை தங்கப்பதக்கங்கள் வென்றார். சென்னை நேரு விளையாட்டு  அரங்கில் அகில இந்திய  தடகள விளையாட்டுப் போட்டி நடந்தது. இதில் 16  வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் பிரிவில் மகளிருக்கான குண்டு எறிதலில் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரீத்தி சிவா பிச்சம்மாள் 9.71  மீட்டர் தொலைவு குண்டு எறிந்து புதிய சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றார். குறிப்பாக கடந்த 83 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இருந்துவந்த சாதனையை முறியடித்தார். மேலும் இவர் 16  வயதுக்கு உட்பட்ட ஜூனியர் மகளிர் பிரிவிற்கான வட்டு எறிதலிலும் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். 25.40 மீட்டர் தொலைவுக்கு வட்டு எறிந்து 36 ஆண்டுகால மற்றொரு சாதனையை முறியடித்துள்ளார். இவ்வாறு சாதனை படைத்த பிரீத்தி சிவா பிச்சம்மாள் உலக அளவில் நடக்க உள்ள இளையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: