சாத்தான்குளம் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

சாத்தான்குளம், ஜன.11: சாத்தான்குளம் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.  சாத்தான்குளம் ராமகோபால கிருஷ்ணபிள்ளை அரசு கிளை நூலகம் சார்பில்  தூய ஸ்தேவான் தொடக்கப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் நெகிழி பை பயன்பாடு குறைப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நூலகர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வாசகர் வட்டத்தலைவர் நடராசன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை வேதராணி வரவேற்றார். இதில் வட்டாரக்கல்வி அலுவலர் யசோதா, கொம்மடிக்கோட்டை நூலகர் சிவனணைந்த பெருமாள் ஆகியோர் பேய்க்குளம் சிகரம் நிறுவன அமைப்பாளர் முருகன் ஆகியோர் பேசினர்.

இதில் பெரிய துணிப்பையை அறிமுகப்படுத்தியும், அனைவரும் நெகிழியை ஓழித்து துணிப்பையை பயன்படுத்திடுமாறும் அறிவுறுத்தப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள், மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நூலகர் சித்திரைலிங்கம் நன்றி கூறினார்.

Related Stories: