கல்லாமொழி துறைமுக பணிக்காக பாறாங்கல் ஏற்றி சென்ற லாரி சரிந்து விபத்து

உடன்குடி,டிச.6: கல்லாமொழியில் நடந்து வரும் துறைமுகப்பணிக்கென பாறாங்கல் ஏற்றிச் சென்ற லாரி திருச்செந்தூர் பகுதியில் சரிந்து விபத்துக்குள்ளானதால் சுமார் 1மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.உடன்குடி அருகே குலசேகரன்பட்டினம் கல்லாமொழியில் துறைமுகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கட்டமைப்பு பணிக்கென பாறங்கற்கள் சாத்தான்குளம் பகுதியில் அளவுக்கதிமான லோடுகளோடு மின்னல் வேகத்தில் சென்று வருகின்றன. நேற்று காலை வழக்கம் போல் அதிகஅளவில் பாறாங்கற்கள் ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி திருச்செந்தூர் நுகர்பொருள் வாணிபக்கழகம் பகுதியில் வரும் போது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும் போது சாலையில் ஓரத்தில் மணலில் சிக்கி சரிந்தது. இதனால் லாரியில் நிரப்பப்பட்ட பாறாங்கற்கள் கீழே விழுந்தன. இதனையடுத்து இரண்டு ஜேசிபிக்கள் கொண்டு சரிந்த லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒருமணிநேரத்திற்கும் மேலாக திருச்செந்தூர்-சாத்தான்குளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: