திருப்பத்தூர் சு.பள்ளிப்பட்டில் உள்ள அரசு குடியிருப்பை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்-அலுவலர்கள் கோரிக்கை

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் சு.பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்பை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் உருவாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து திருப்பத்தூர் தாலுகாவாக இருக்கும் போது தர்மபுரி ரோட்டில் உள்ள சு.பள்ளிப்பட்டு ஊராட்சியில் அரசு அலுவலர்கள் குடியிருப்பு பகுதி சுமார் 150 வீடுகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது.

 

இதில் ஏராளமான அரசு அலுவலர்கள் சலுகை விலையில் வாடகை கொடுத்து வசித்து வந்தனர். அதன் பின்பு இந்த பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து இடிந்து விழும் தருவாயில் இருந்து வந்தது. இதனால் அங்கு இருந்த அரசு அலுவலர்கள் வீடுகளை காலி செய்து சென்றுவிட்டனர்.

தற்போது இந்த அரசு அலுவலர்கள் குடியிருப்பு பகுதி 5 பிரிவுகளாக 150க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து, ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு. பகல் இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் இருந்து வருகிறது. மேலும், குடியிருப்பு பகுதிகள் முழுவதும் அடர்ந்த புதர்காடாக காட்சியளிக்கிறது. எனவே இந்த அரசு குடியிருப்பை சீரமைத்து அரசு அலுவலர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அரசு அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: