கொரோனா பரவல் அதிகரித்து வரும்நிலையில் நோயாளிகளுக்கு முககவசம் கட்டாயம்

செங்கல்பட்டு: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முககவசம் அணிவது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில், நாளை முதல் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரிகளில் முக கவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்வர் நாராயணசாமி  பொதுமக்களுக்கு முககவசங்களை வழங்கினார். அப்போது, படுக்கையில் இருந்த நோயாளிகளுக்கு அவர்  முககவசத்தை அணிவித்தார். மேலும், நாளை முதல் முககவசம் அணிவது கட்டாயம் என கூறப்பட்ட நிலையில், நேற்று முதலே செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories: