குமரி ஆபாச பாதிரியாரிடம் போலீஸ் காவலில் விசாரணை

நாகர்கோவில்: குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சூழால் குடயால்விளையை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29) மீது நர்சிங் மாணவி அளித்த பாலியல் புகாரின் பேரில் குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாளை சிறையில் அடைக்கப்பட்ட அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக நாகர்கோவில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 1 ல் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, 1 நாள் மட்டும் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். அதன் பேரில் நேற்று முன்தினம் மாலை பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை பாளை சிறையில் இருந்து நாகர்கோவில் அழைத்து வந்து ஏடிஎஸ்பி ராஜேந்திரன் மேற்பார்வையில் போலீசார் விசாரித்தனர். இளம்பெண்களுடனான தொடர்பு குறித்தும், வேறு ஏதாவது லேப்டாப், பென் டிரைவ்  உள்ளதா என்பது குறித்தும் அவரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. பின்னர் நேற்று மாலை மீண்டும் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளை சிறைக்கு பாதிரியார் கொண்டு செல்லப்பட்டார்.

Related Stories: