திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில் உள்ள வளமீட்பு பூங்காவில் நடக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளை திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் மு.மாகின் அபுபக்கர் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மக்கும் குப்பைகளான காய்கறி மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டார்.மக்காத குப்பைகளான துணி, செருப்பு, பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் ஆகியவற்றை தரம்பிரித்து மறுசுழற்சி செய்ய அனுப்பி வைக்கும் பணிகளையும் பார்வையிட்டார். மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து கொடுக்கவேண்டும் என ஒவ்வொரு வீட்டிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.