தனிநபர் சுதந்திரத்தின் பாதுகாவலர் நீதிமன்றம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரபரப்பு பேச்சு

மும்பை: சட்டத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் தனி மனித சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் பொறுப்பு என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார். மும்பை,ஒய்.பி.சவான் மையத்தில் நேற்று நடந்த வக்கீல் அசோக் தேசாய் நினைவு கருத்தரங்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: சட்டத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். தனிநபர் சுதந்திரத்தை வழங்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றத்திடம் உள்ளது. சுதந்திரத்தின் பாதுகாவலர்களாக நீதித்துறை உள்ளது. நீதிமன்றம்,உயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை பொறுத்தவரையில் இந்த வழக்கு சிறிய வழக்கு, இந்த வழக்கு பெரிய வழக்கு என்று எந்த வழக்கும் கிடையாது.

சட்டத்தின் மீது  மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது, முறையான சட்ட நடவடிக்கைகள் மற்றும்  தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றத்திடம் உள்ளது ’’ என்றார். நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியம் முறை குறித்து ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தொடர்ந்து விமர்சித்து வருகிறார். கிரண் ரிஜிஜூ சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசுகையில்,‘‘ உச்சநீதிமன்றம்  ஜாமீன் மனுக்கள், தேவையற்ற பொதுநல மனுக்களை விசாரிக்கக்கூடாது;  அரசியலமைப்பு சம்பந்தமான மனுக்களை மட்டும் விசாரிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இவ்வாறு பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: