இஸ்தான்புல் குண்டு வெடிப்பு சிரியா பெண் கைது

இஸ்தான்புல்: துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடந்த குண்டு வெடிப்புக்கு காரணமான சிரியாவை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இஸ்தான்புல்லில் தக்சிம் சதுக்கம் அருகே கடைகள், உணவகங்கள் நிறைந்த பரபரப்பான இஸ்திக்லால் சாலையில் நேற்று முன்தினம் குண்டு வெடித்தது. இதில் 6 பேர் பலியாகினர். மேலும், 81 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தீவிரவாத சதி என அந்நாட்டு அரசு சந்தேகம் தெரிவித்த நிலையில், குண்டுவெடிப்பு தொடர்பாக சிரியா பெண் ஒருவரை போலீசார் கைது செய்திருப்பதாக துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு நேற்று தெரிவித்தார். குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியிடம் இருந்து இந்த தாக்குதலை நடத்தும்படி உத்தரவு வந்ததாக கைதான அப்பெண் கூறியதாகவும் அமைச்சர் தகவல் கூறி உள்ளார்.

Related Stories: