நகோர்னா - கராபாக் சர்ச்சை அஜர்பைஜான் தாக்குதலில் 49 அர்மீனிய வீரர்கள் பலி

மாஸ்கோ: தெற்கு காகசஸ் மலைப்பகுதியில் உள்ள நகோர்னா - கராபாக் பகுதி, சர்ச்சைக்குரிய பகுதியாகும். இதை அஜர்பைஜான் நாட்டின் ஒருங்கிணைந்த  பகுதியாக சர்வதேச நாடுகள் அங்கீகரித்துள்ளன. இதற்கு அர்மீனியாவும் உரிமை கோரி வருகிறது.  இந்த இடத்துக்காக இரு நாடுகளும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 1994ம் ஆண்டு முதல் அர்மீனியாவின்  ஆதரவு பெற்ற அர்மீனிய இன பிரிவுகளின் கட்டுப்பாட்டில் இந்த இடம் உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே 6  வாரங்கள் நடந்த போரின்போது, அர்மீனிய இன பிரிவினர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நாகோர்னோ-கராபாக்கின் பெரும் பகுதியை அஜர்பைஜான் கைப்பற்றியது.

இந்நிலையில், அஜர்பைஜான் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் 49 அர்மீனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து இந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அஜர்பைஜானின் 3 மாவட்டங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீது அர்மீனிய படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அந்த பகுதிகளில் கண்ணிவெடிகளை புதைத்தனர். இதனால், அஜர்பைஜான் படைகள் பெரும் உயிரிழப்புகளை சந்தித்தன. இதற்கு பதிலடி கொடுக்கவே, நடவடிக்கை எடுக்கப்பட்டது,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: