பயணிகள் தகவலை பணமாக்குவதா? ஐஆர்சிடிசி, டிவிட்டருக்கு நாடாளுமன்ற குழு சம்மன்

புதுடெல்லி: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) நிறுவனமானது, 10 கோடிக்கும் அதிகமான ரயில் பயணிகளின் தகவல்களை கொண்டுள்ளது. இதில் 7.5 கோடி பேர் செயல்பாட்டில் உள்ளவர்கள். அவர்களின் தகவல்களைக் கொண்டு ரூ.1000 கோடி வருவாயை ஈட்டும் வகையில் ஒரு ஆலோசகரை நியமிக்க ஐஆர்சிடிசி டெண்டரை அறிமுகப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த டெண்டர் குறித்து ரயில்வே அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.

இந்த சூழல்நிலையில் குடிமக்களின் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பிரச்னை குறித்து காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

அப்போது, ஐஆர்சிடிசி அதிகாரிகள் ஆஜராக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடம் குடிமக்களின் தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பிரச்னை குறித்து கேள்வி எழுப்பப்படும். இதேபோல், டிவிட்டருக்கான இந்தியாவின் பிரதிநிதிகளும் இதே பிரச்னை குறித்து ஆஜராகி விளக்கமளிக்க உள்ளனர்.

Related Stories: