விலகினார் ஹலேப்: பைனலில் பியான்கா

ஹோம்பர்க்: ஜெர்மனியில்  பேட் ஹோம்பர்க் ஓபன்  மகளிர் டென்னிஸ் போட்டி நடக்கிறது.  அதன் காலிறுதி ஒன்றில் முன்னணி வீராங்கனையான ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை(25வயது , 13வது ரேங்க்)  வீழ்த்தி கனடாவின் பியான்கா ஆண்டிரீஸ்கு(22வயது, 64வது ரேங்க்) அரையிறுதிக்கு மு ன்னேறினார். முன்னாள்  யுஎஸ் கிராண்ட் ஸ்லாம் சாம்பியனான  பியான்கா, கொரோனா காலத்துக்கு பிறகு பெரிய அளவில் வெற்றியை குவிக்க முடியாமல் திணறி வந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டில் முதல் முறையாக இந்த தொடரில் தான் அரையிறுதிக்கு முன்னேறினார். அவரை எதிர்த்து முன்னணி வீராங்கனையான  ருமேனியாவின் சிமோனா ஹாலேப்(30வயது, 19வது ரேங்க்) அரையிறுதியில் களம் காண இருந்தார். முன்னாள் பிரெஞ்ச், விம்பிள்டன் ஓபன் கிராணட் ஸ்லாம் சாம்பியனான சிமோனா அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். மீண்டும் காயம் அவரை அவதிப்படுத்த, ஹோம்பர்க் தொடரின் அரையிறுதியில் இருந்து நேற்று விலகினார்.

அதனால் பியான்கா இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் 2021ம் ஆண்டு  மார்ச் மாதம் நடந்த மயாமி ஓபனுக்கு பிறகு இப்போதும் தான் இறுதி ஆட்டம் ஒன்றில் விளையாட இருக்கிறார். கூடவே  2019ம் ஆண்டு யுஎஸ் ஓபனுக்கு பிறகு ஒரு பட்டம் கூட அவர் வென்றதில்லை.

Related Stories: