ஐபிஎல்: வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் லக்னோ அணிக்கு திரும்புகிறார்: ரசிகர்கள் குஷி!

லக்னோ: ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு முன்பாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தி கிடைத்துள்ளது. கடந்த சில காலமாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், தற்போது முழு உடல் தகுதியை எட்டியுள்ளார். மணிநேரத்திற்கு 156 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் மயங்க் யாதவ் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது, லக்னோ அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

மயங்க் யாதவ் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளதை லக்னோ அணி நிர்வாகம் சமூக வலைதளங்கள் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது. மயங்க் யாதவ் 2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்காக அவர் விளையாடிய பயிற்சி போட்டிகள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு எதிரான அந்த ஆட்டங்களில் மயங்க் சிறப்பாகச் செயல்பட்டார். குறிப்பாக நமீபியாவுக்கு எதிரான போட்டியில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது அவர் சர்வதேசத் தரத்திற்குத் தயாராகிவிட்டதைக் காட்டியது.

மயங்க் யாதவின் ஐபிஎல் புள்ளிவிவரங்கள் அவரது திறமைக்குச் சான்றாக உள்ளன. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், 20.55 என்ற சிறந்த சராசரியைக் கொண்டுள்ளார். ஐபிஎல்லில் 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்தது அவரது சிறந்த பந்துவீச்சாகும். 150 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் தொடர்ந்து பந்துவீசும் மயங்க் யாதவ், இந்த சீசனில் எதிரணி பேட்டர்களுக்கு ஒரு சிம்மசொப்பனமாகத் திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: