7லிருந்து 8க்கு மாறிய தல

சென்னை: நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தோனி தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்று நாயகனாக விளங்கும் தோனியின் ஜெர்சி எண் 7 ஆகும். ஆனால் தனது ஜெர்சி எண் இனி 7 அல்ல 8 என தோனி கூறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் 7ம் எண் ஜெர்சியை கழற்றி விட்டு 8 என குறிப்பிட்டிருக்கும் ஜெர்சியை மாட்டுகிறார். பின்னர், சில எண்கள் நம்முடன் அப்படியே தங்கி விடும். 7 எப்போதும் எனக்கு அப்படிப்பட்ட ஒன்றுதான்.

ஆனால் நான் இன்று 8க்கு மாறுகிறேன் அதற்கான காரணம் உங்களுக்கு விரைவில் தெரியும் என குறிப்பிட்டுள்ளார். தோனியின் ஜெர்சி எண் அவரது பிறந்த தேதியுடன் தொடர்புடையது. இந்திய கிரிக்கெட்டிற்கு அவர் வழங்கிய சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அந்த எண்ணிற்கு கிரிக்கெட் வாரியம் ஓய்வு அளித்தது. சச்சினின் ஜெர்சி எண் 10க்கு பிறகு ஓய்வளிக்கப்பட்டது தோனியின் 7 மட்டுமே. அந்த எண்களை இந்திய வீரர்கள் யாரும் இனி பயன்படுத்த அனுமதி கிடையாது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதே 7ம் எண் ஜெர்சியிலேயேதான் விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: