ஹாமில்டன்: நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா அணி 5 டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வெல்ல, 2வது போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கான்வே 60 ரன்கள் எடுத்தார். அடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி களமிறங்கி விளையாடியது. ஆனால் நியூசிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி 15.3 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜார்ஜ் லின்டே 33 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் பர்குசன், சியர்ஸ் தலா 3 விக்கெட் எடுத்தனர். ஆட்டநாயகன் விருது கான்வேக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி என 1:1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.
