ரஷ்யா: ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும் இடையே நடைபெற்ற போரினால் ஏற்பட்ட பாதிப்புகளும் உலகம் அறிந்தது. ரஷ்யா படைகள் வீசிய குண்டு மழையால் உக்ரைன் உருக்குலைந்தது. 100 நாட்களை கடந்தும் போரின் உக்கிரம் குறையவில்லை. இதனால் உக்ரைனில் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்து அநாதைகள் ஆகியுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டும் அறக்கட்டளைக்கு 5 லட்சம் டாலர் நிதி தருவதாக அறிவித்தார் ரஷ்யாவின் பிரபல பத்திரிக்கையாளரான டிமிட்ரி மொராடோவ். ரஷ்யாவின் பிரபல பத்திரிக்கையான நோவாவா கெசட்டேவின் நிறுவனர்களில் ஒருவரான டிமிட்ரி மொராடோவுக்கு கடந்த 2021ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் பத்திரிக்கையாளரான மரியா ரெஸ்ஸாவுடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசை அவர் பகிர்ந்துகொண்டார். கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்ட, உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் பாடுபட்டதற்காக அமைதிக்கான நோபல் பரிசு டிமிட்ரி மொராடோவுக்கும், மரியா ரெஸ்ஸாவுக்கும் வழங்கப்பட்டது.