கராச்சி: பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ரம்ஜான் மாதத்தின் முதல் நாள் என்பதால் ஓல்ட் சோல்ஜர் பஜார் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் முதல் தளத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தொழுகை நடத்துவதற்காக அனைவரும் விழித்திருந்தனர். இந்நிலையில் கேஸ் கசிவு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் கட்டிடம் இடிந்துவிழுந்தது. இதில் சிக்கிய குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இதில் 7 பேர் குழந்தைகள். மேலும் 14 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளில் இருந்து இதுவரை 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அங்கு உயிர் பிழைத்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.
