மெக்சிகோ சிட்டி: எல் சால்வடார் மற்றும் மெக்சிகோ கடற்படைகள் இந்த வாரம் சுமார் 10 டன் அளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளன. மெக்சிகோ நேற்று முன்தினம் சுமார் 4 டன் அளவுள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்ததாக அறிவித்தது. மன்சானிலோ துறைமுகத்திற்கு தெற்கே நீர்மூழ்கி கப்பலில் இருந்து மூன்று பேர் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் ஒமர் கார்சியா ஹார்புச் எக்ஸ் தளத்தில்,” இந்த வாரம் சுமார் 10 போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். உளவுத்துறையின் ரகசிய தகவல்கள் அடிப்படையில் அமெரிக்க வடக்கு கமாண்ட் மற்றும் அமெரிக்க கூட்டு நிறுவன பணிக்குழு ஆகியவற்றுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
