சியோல்: வடகொரியாவில் அதிபர், விரைவில் நடக்கும் ஆளும் கட்சியின் மாநாட்டுக்கு முன்னதாக தனது ராணுவ திறனை வெளிப்படுத்தும் வகையில் சுமார் 50 புதிய ராக்கெட் ஏவுகணைகளை நிறுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். வடகொரியாவில் விரைவில் ஆளும் கட்சியான அதிபர் கிம் ஜாங் உன்னின் வடகொரிய தொழிலாளர் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது.
இந்நிலையில் மாநாட்டுக்கு முன்னதாக தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் அணுசக்தி திறன் கொண்ட குறுகிய தூரம் சென்று தாக்கும் சுமார் 50 புதிய ஏவுகணை வாகனங்களை வடகொரிய ராணுவம் நிலை நிறுத்தி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மற்றும் 2021ம் ஆண்டுகளில் கட்சி மாநாடு நடந்த இடமும் ஏப்ரல் 25ம் தேதி மாநாடு நடைபெறவுள்ள இடமான கலாச்சார சபைக்கு அருகில் இந்த லாஞ்சர் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அதிபர் கிம் உரையில், அற்புதமான ராக்கெட் லாஞ்சர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட வழிகாட்டும் தொழில்நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. வரவிருக்கும் மாநாட்டில் அணு ஆயுத ராணுவத்தின் திறன்களை விரிவுபடுத்துவதற்கான புதிய திட்டங்கள் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிபர் கிம்மின் சகோதரி கூறுகையில், தென்கொரிய அமைச்சர் ஒருவர் பொதுமக்களால் இயக்கப்பட்ட டிரோன்கள் ஊடுருவியது தொடர்பாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஆனால் எதிரியான தென்கொரியாவிற்கு எதிராக வடகொரியா எல்லை பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றது” என்றார்.
