ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பியான்கா ஆண்ட்ரீஸ்கு விலகல்: டுவிட்டரில் உருக்கமான பதிவு

டோராண்டோ: ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் ஜனவரி 17ம்தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இருந்து 2019ம் ஆண்டு யுஎஸ் சாம்பியனான உலக தரவரிசையில் 46வது இடத்தில் இருக்கும் 21 வயதான கனடாவின்  பியான்கா ஆண்ட்ரீஸ்கு  விலகி உள்ளார். 2022 சீசனுக்காக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.

டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அனைவருக்கும் வணக்கம். நீங்கள் அனைவரும் அறிந்தபடி, கடந்த 2 வருடங்கள் பல்வேறு காரணங்களுக்காக எனக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. குறிப்பாக இந்த ஆண்டு, நான் பல வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் செலவிட்டேன், இது என்னை  மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரிதும் பாதித்தது. கூடுதலாக, என் பாட்டி கோவிட் நோய்த்தொற்றுக்காக ஐசியுவில் பல வாரங்கள் கழித்தார், இது என்னை மிகவும் பாதித்தது.

இதிலிருந்து மீண்டு வரவும், வளரவும் எனக்கு கூடுதல் நேரம் கொடுக்க விரும்புகிறேன். எனவே நான் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் எனது சீசனைத் தொடங்கமாட்டேன், ஆனால் வரவிருக்கும் 2022 டென்னிஸ் சீசனைப் பிரதிபலிக்கவும், பயிற்சி செய்யவும் மற்றும் தயாராக இருக்கவும் சில கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

Related Stories: