தர்மடம் தொகுதியில் கேரள முதல்வர் வேட்பு மனு தாக்கல்

திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இடதுசாரி, காங்கிரஸ், பாஜ என்று மும்முனை போட்டி நிலவுகிறது. மார்க்சிஸ்ட் சார்பில் கடந்த முறை கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில்  போட்டியிட்ட பினராய் விஜயன் முதல்வரானார். இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அதன்படி பினராய் விஜயன் நேற்று காலை 11 மணிக்கு கண்ணூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி பெவின் ஜாணிடம்  வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 2 ெசட் ேவட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கலின்போது மார்க்சிஸ்ட் கண்ணூர் மாவட்ட செயலாளர் ஜெயராஜன் உடன் இருந்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது குற்ற  வழக்குகள் உள்ளனவா என்பது குறித்து குறிப்பிட வேண்டும். முதல்வர் பினராய் விஜயன் மீது லாவ்லின் ஊழல் வழக்கு இருப்பதால் அது தொடர்பாக ேவட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Related Stories: