சிவகங்கையில் நீரில் மூழ்கி அழுகிய நிலையில் நெற்பயிர்கள்: விவசாயிகள் நிவாரணம் வழங்க கோரிக்கை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் மாலை கண்டான் இந்த கிராமத்தில் நூற்றி ஐம்பதுக்கு மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது சிவகங்கை மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருவதால் மாலை கண்டான் கிராம பெரிய கம்மாயில் ஒரு சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிஅழுகி உள்ளன. இந்த அழகிய நெற்பயிருக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதோடு மட்டுமல்லாமல் இந்த மாலை கண்டான் பெரிய  கம்மாயில் மேடான பகுதியில் தடுப்பணை 1986 ஆம் ஆண்டுகட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த பகுதிக்கு கம்மாயில் இருந்து தண்ணீர் செல்வதில்லை தேவையில்லாத இடத்தில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளதாகவும் அப்போது தடுப்பணை கட்டிய பொறியாளரிடம் இந்த இடத்தில் தண்ணீர் ஏறி வராது அதனால் தற்போது உடைத்து தண்ணீர் வெளியேறும் இடத்தில் தடுப்பணை கட்டி தருமாறு அப்பகுதி விவசாயிகள் பொறியாளரிடம் கூறியுள்ளனர்.

ஆனால் விவசாயிகளிடம் பொறியாளர் நான் பொறியாளருக்கு படித்து வந்திருக்கிறேன் எனக்கு தடுப்பணை எங்கே கட்ட வேண்டும் என்று தெரியும் என்று கூறி தேவையில்லாத இடத்தில் தடுப்பணையை கட்டியுள்ளார் தண்ணீர் உடைத்து வெளியேறும் பகுதியில் தடுப்பணை கட்டவில்லை. தண்ணீர் உடைத்துக் கொண்டு வெளியேறும் பகுதியில் தடுப்பணை தமிழக அரசு தட்டிக் கொடுத்தாள் கம்மாயில்  இருக்கும் தண்ணீரை வைத்து மழை நின்றபிறகு மறு விவசாயம் செய்யலாம் என்றும் அந்த கிராம விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: