கரூர் சுக்காலியூர் பகுதியில் வடிகால் அமைக்க தோண்டிய பள்ளத்தில் தேங்கும் மழை நீரால் சுகாதார சீர்கேடு

கரூர்: கரூர் சுக்காலியூர் பகுதியில் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கி கொசுக்களின் உற்பத்திக்கு வழி வகுத்து சுகாதாரசீர் கேடு ஏற்படுகிறது.கரூர் நகராட்சிக்குட்பட்ட சுக்காலியூர் பகுதியை சுற்றிலும் சில நாட்களாக வடிகால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு, சில பகுதிகளில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் அதிகளவு தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது.மேலும், மழைநீர் தேக்கம் காரணமாக கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்த நிலையில் உள்ளது. எனவே, இந்த பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணியை விரைந்து முடித்து, பள்ளத்தை விரைந்து மூட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: