தமிழ்நாட்டில் 4 இடங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது: 20ம் தேதி வரை அதிகரிக்கும்

சென்னை: தமிழ்நாட்டில் படிப்படியாக அதிகரித்து வரும் வெப்பத்தின் காரணமாக 4 இடங்களில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. 10 இடங்களில் வெயில் சதம் அடித்தது. இந்நிலையில் 20ம் தேதி வரை மேலும் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ெதரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வெப்பம் படிப்படியாக அதிகரித்து வரும் சூழல் உருவாகியுள்ளது, அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பாகவும், ஓரிரு இடங்களில் இயல்பைவிட அதிகமாகவும் இருந்தது.

குறிப்பாக புதுச்சேரி, மதுரை, சென்னை, வேலூர் ஆகிய பகுதிகளில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. கடலூர், ஈரோடு, கரூர், நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, திருச்சி, திருத்தணி உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் 100 டிகிரி நிலவியது.  வடதமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் சராசரியாக 100 டிகிரியும், தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 100 டிகிரி முதல் 102 டிகிரி வரையும், வட தமிழக கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 100 டிகிரியும், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் 90 டிகிரியும், வெயில் பதிவானது.

இதற்கிடையே, தென் மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக 22ம் தேதி வரை தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதுதவிர மேற்கண்ட நாட்கள் வரையில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியசுக்கும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 4 இடங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது: 20ம் தேதி வரை அதிகரிக்கும் appeared first on Dinakaran.

Related Stories: