விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாஜவின் அழுத்தத்தால் அதிமுக புறக்கணிப்பா? எடப்பாடி பழனிசாமி விளக்கம்

அவனியாபுரம்: ‘விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது ஏன்’ என எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:பாஜவிற்கு உதவிடவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருப்பதாக கூறுகிறீர்கள்.

அதிமுகவிற்கும், ப.சிதம்பரத்திற்கும் என்ன சம்பந்தம்? இடைத்தேர்தலில் போட்டியிடாதது அதிமுகவில் எடுத்திருக்கும் முடிவு. அவருடைய கட்சியில் எடுக்கப்பட்ட முடிவல்ல. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் இருக்க காரணம், அங்கு தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது என்பதால்தான்.இடைத்தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் செய்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முயற்சி செய்வார்கள்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்புக்கு வேறு எந்த காரணமும் இல்லை’’ என்றார். தொடர்ந்து, ‘நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற்றது போல் 2026ல் 200 இடங்களில் திமுக வெற்றி பெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாரே?’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, ‘‘சட்டமன்றத் தேர்தல் வேறு; நாடாளுமன்ற தேர்தல் வேறு. மக்கள் தேர்தல்களை பிரித்து பார்த்து தான் வாக்களிக்கிறார்கள்’ என்றார்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாஜவின் அழுத்தத்தால் அதிமுக புறக்கணிப்பா? எடப்பாடி பழனிசாமி விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: