காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை

சென்னை: முன்னாள் அறங்காவலருக்கு மிரட்டல் விடுத்த புகாரில் காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் காளிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2002 முதல் 2009 வரை சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோயில் அறங்காவலராக இருந்தவர் விஸ்வநாதன். 2009-ம் ஆண்டுக்கு பின்னர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நபர்கள் நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். பக்தர்கள் அளிக்கும் நகைகள், பணத்தை காளிதாஸ், எடுத்துச் செல்வதாக புதிய நிர்வாகத்திடம் விஸ்வநாதன் புகார் அளித்தார்.

விஸ்வநாதன், காளிதாஸ் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் பைக்கில் சென்றபோது தாக்கியதாக கூரப்பப்டுகிறது. பைக்கில் சென்ற போது பின் தொடர்ந்து வந்த நபர்கள் வழி மறித்து மிரட்டல் விடுத்தனர் என விஸ்வநாதன் குற்றம் சாட்டினார். இது குறித்து வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சென்னை காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் காளிதாஸ் உள்ளிட்ட 5 பேர் மீது திருவல்லிக்கேணி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: