சுற்றுச்சூழல் நிபுணர்களின் எச்சரிக்கையால் உஷாராகும் இந்தியா: இமயமலை பனிப்பாறைகளின் ஆழத்தை ஆய்வு செய்ய திட்டம்

டெல்லி: புவி வெப்பமாதலால் பனி மலைகள் காணாமல் போகும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து இமயமலையில் உள்ள பாறைகளின் ஆழத்தையும், அவற்றில் கிடைக்கும் தண்ணீரின் அளவை அளவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக களமிறங்கியுள்ள மத்திய புவி அறிவியல் அமைச்சகம், அடுத்து வரும் கோடைக்காலத்தில் குறிப்பாக ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் பனிகள் உருகும் என்று கூறியுள்ளது.

இந்த திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு தேசிய துருவங்கள் மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்திரா நதிப்படுகையில் உள்ள 7 பனிப்பாறைகளை முதலில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தண்ணீர் கிடைக்கும் தன்மையும், பனிப்பாறைகள் அதிகரிக்கின்றதா அல்லது குறைகிறதா என்பதை புரிந்துகொள்ளவும் முடியும்.

இந்த திட்டம் வெற்றி அடைந்த உடன் இமயமலையின் பிற பகுதிகளிலும் அடுத்த அடுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். பின்னர் மற்ற பனிப்பாறைகளை ஆராய விமானங்கள் அல்லது ஆளில்லாத விமானங்களை பயன்படுத்த உள்ளதாக தேசிய துருவங்கள் மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

Related Stories: