டெல்லி: சாகித்ய அகாடமி விருது பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தற்கு மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சாகித் அகாடமி விருது நேற்று அறிவிக்கப்பட இருந்த நிலையில் திடீரென்று ஒன்றிய அரசின் தலையீட்டால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சாகித்ய அகாடமி விருது பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தற்கு மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; சாகித்ய அகாடமி தனது பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தது மிகவும் மோசமான செயல்.
தன்னாட்சி அமைப்பான சாகித்ய அகாடமி தனது வரலாற்றில் முதல் முறையாக ஆளும் அரசுக்கு அடிபணிந்தது வெட்கக் கேடானது. செயலாளரே இல்லாமல் செயல்படும் சாகித்ய அகாடமி, அரசின் முன் மண்டியிட்டிருப்பது அதன் நிறுவனர்களின் லட்சியத்தை சிதைப்பதாக உள்ளது. இந்திய கலாச்சார அமைப்புகளை கைப்பற்ற முனையும் பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் மோகன் பகவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இலக்கியம் மீது பற்றுள்ள அனைவரும் கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார்.
