டெல்லியில் பரவும் வேகம் தணிந்தது புதிதாக 1,376 பேருக்கு கொரோனா தொற்று : மூன்றரை மாதத்திற்கு பின் பலி குறைந்தது

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று புதிதாக 1,376  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நோய்க்கு 60பேர் நேற்று பலியாகினர். டெல்லியில் கொரோனாவால் இதுவரை  6,08,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் ஒரே நாளில் புதிதாக 1,376 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோன்று கடந்த மூன்றரை மாதங்களுக்கு பின்னர் நேற்று பலி எண்ணிக்கை குறைந்து 60 ஆக பதிவானது. இதன்மூலம் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 10,074 ஆக பதிவானது.  நோய் தொற்று பாசிட்டிவ் விகிதம் கடந்த ஞாயிறன்று 2.74 சதவீதமாக இருந்தது. இது தற்போது 2.15 சதவீதமாக குறைந்துள்ளது. நோய் பாசிட்டிவ் விகிதம் கடந்த டிசம்பர் 3 முதல் டிசம்பர் 7 வரை முறையே 4.96 சதவீதம், 4.78 சதவீதம், 4.2 சதவீதம், 3.68 சதவீதம் மற்றும் 3.15 சதவீதமாக குறைந்து பதிவாகியுள்ளது.

எனினும், கடந்த டிசம்பர் 8ம் தேதியன்று 4.23 சதவீதமாக அதிகரித்து பின்னர் அடுத்த நாள் 3.42 சதவீதமாக குறைந்தது. டிசம்பர் 10 அன்று 2.46 சதவீதமாகவும், பின்னர் டிசம்பர் 11 அன்று 3.33 சதவீதமாகவும் டிசம்பர் 12 இன்று 2.64 சதவீதமாகவும் சரிவடைந்தது. நேற்று முன்தினம் சுமார்  63,944 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், 36,176 ஆர்டிபிசிஆர் சோதனைகளும் அடங்கும். புதிய நோய் தொற்று பாதிப்பு  எண்ணிக்கை கடந்த ஆகஸ்டு 31ம் தேதிக்கு பின் நேற்று குறைவாக பதிவானது.

Related Stories: