தமிழகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி  வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம், தெற்குமயிலோடை மஜரா தலையால் நடந்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி அபிராமி என்பவரின் கணவர் திரு.  பாலமுருகன் என்பவர் விவசாய நிலத்தில் நீர் பாய்ச்சும்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்.

கோவில்பட்டி வட்டம் மற்றும் நகரம் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த திரு.பாண்டி என்பவரின் மகன் சிறுவன் சந்தியாகு விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டில் தொங்கிக் கொண்டிருந்த மின்  வயரை தொட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் மழையூர் சரகம், தென்மழையூர் பகுதியைச் சேர்ந்த திரு.ராமன் என்பவரின் மகன் திரு.கருப்பையா என்பவர் எதிர்பாராத விதமாக விவசாய  நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் , மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், அண்ணாமலைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த திரு. தாஸ் என்பரின் மகன் சிறுவன் சுரேன் என்பவர் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் செய்தியையும்; கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், மிடாலம் கிராமத்தைச் சேர்ந்த திரு. லூயிஸ் மார்ட்டின் என்பவரின் மகன் திரு. ஜெயசேகர் என்பவர் கட்டடப் பணியின் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி  உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

சென்னை மாவட்டம், திருவொற்றியூர் வட்டம், திருவொற்றியூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.ரவிச்சந்திரன் என்பவரின் மகன் திரு.சுரேன் என்பவர் லாரியில் மூட்டைகளை ஏற்றும் பணியின் போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; சோழிங்கநல்லூர் வட்டம், பள்ளிக்கரணை கிராமத்தைச் சேர்ந்த திரு.செல்வகுமார் என்பவரின் மகன் திரு.பாபு என்பவர் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், சுண்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரு.செந்தட்டிக் காளைப்பாண்டியன் என்பவரின் மகன் திரு.சரவணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக மின் கம்பி அறுந்து விழுந்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 8 நபர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Related Stories: