கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் விவகாரம்; சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: முதல்வர் எச்சரிக்கை

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் குற்றத்தில் ஈடுபட்டவர்கள், தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த்துள்ளார்.

முதல்வரின் எக்ஸ் வலைதளப் பதிவில்:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.

The post கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் விவகாரம்; சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: முதல்வர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: