சிதம்பரத்தில் பல்கலைக்கழக போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை; தீட்சிதருக்கு தொடர்பு?.. தீவிர விசாரணை

கடலூர்: போலி சான்றிதழ் விவகாரத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் சங்கரிடம் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது. கேரளா பல்கலைக்கழகம், கர்நாடகா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வகைகயில் அண்ணாமலை பல்கலைக்கழக பெயரில் போலி சான்றிதழ் தயாரித்ததாக நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது. புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின்பேரில் கிள்ளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 5,000க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள் அச்சிட்டு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.2 கம்ப்யூட்டர்கள், லேப்டாப், பிரிண்டர் செல்போன் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக தீட்சிதர் உள்ளிட்ட இருவரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

போலி சான்றிதழ் தொடர்பாக சிதம்பரம் மன்மதசாமி நகரை சேர்ந்த தீட்சிதர் சங்கர், நாகப்பன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. போலி சான்றிதழ் விவகாரத்தில் தீட்சிதருக்கு தொடர்பா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

The post சிதம்பரத்தில் பல்கலைக்கழக போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை; தீட்சிதருக்கு தொடர்பு?.. தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: