நேரடி வரிவசூல் ₹4.62 லட்சம் கோடி: வருமான வரித்துறை தகவல்

புதுடெல்லி: வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘தற்போதைய புள்ளி விபரங்களின்படி, நடப்பு நிதியாண்டு (ஜூன் 17ம் தேதி வரை) நேரடி வரி வசூல் ரூ.4,62,664 கோடியாகும். இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலான ரூ.3,82,414 கோடியுடன் ஒப்பிடுகையில் 20.99 சதவீதம் அதிகம். நிகர நேரடி வரி வசூலில் பெருநிறுவன வரி ரூ.1,80,949 கோடியாகவும், பங்கு பரிவர்த்தனை வரியை உள்ளடக்கிய தனிநபர் வருமான வரி ரூ.2,81,013 கோடியாகவும் உள்ளது.

நடப்பு நிதியாண்டின் முன்கூட்டியே வரி வசூல் ரூ.1,48,823 கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலான ரூ.1,16,875 கோடியுடன் ஒப்பிடுகையில் 27.34 சதவீதம் அதிகம். வரி பிடித்தத்துக்குப் பிறகு வரி செலுத்துவோருக்கு ரூ.53,322 கோடி திருப்பி (ரீஃபண்ட்) அளிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் திருப்பி அளிக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் 33.7 சதவீதம் அதிகம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நேரடி வரிவசூல் ₹4.62 லட்சம் கோடி: வருமான வரித்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: