பீகார் மாநில அமைச்சர் ஒருவரே நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவரா? : திடுக்கிடும் தகவல்கள்!!

பாட்னா : பீகார் மாநில அமைச்சர் ஒருவரே நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவராக செயல்பட்டது தற்போது அம்பலமாகி இருக்கிறது. நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ந் தேதி நடைபெற்றது. இந்த நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் தொடங்கி ஏராளமான முறைகேடு புகார்கள் அடுத்தடுத்து குவிந்து வருகின்றன. குறிப்பாக பீகார் மாநிலத்தில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனை விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனை விவகாரத்தில் பீகார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் 4 மாணவர்களை கைது செய்துள்ளனர்.

பீகாரில் நீட் தேர்வு எழுதிய ஆயுஷ்ராஜ், அபிஷேக் குமார், சிவனந்தன் குமார் ஆகிய 3 பேருக்கு ஒரு நாள் முன்பே வினாத்தாள் கிடைத்தது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது. பாட்னா போலீசார் நடத்திய விசாரணையில் வினாத்தாள் முன்கூட்டியே கிடைத்ததை மாணவர் ஆயுஷ் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நீட் வினாத்தாளை ஒருநாள் முன்கூட்டியே கொடுத்து அதற்கான விடைகளை மனப்பாடம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியதாக மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனிடையே நீட் முறைகேட்டில் சிக்கிய மாணவர் ஒருவருக்கு பீகார் அமைச்சர் ஒருவர் உதவியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாட்னாவில் நீட் எழுதிய அனுராக் என்ற மாணவர் அமைச்சர் ஒருவரின் பரிந்துரையில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார்.வினாத்தாள் கசிவு புகாரில் கைது செய்யப்பட்ட சிக்கந்தர், அமைச்சர் பரிந்துரை பேரில் மாணவரை அழைத்துச் சென்றுள்ளார்.அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய மாணவர் அனுராக்கை வரவழைத்து பாட்னா போலீசார் விசாரணை நடத்துகின்றனர். விசாரணைக்கு ஆஜரான அனுராக் என்ற மாணவரின் உறவினரும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 2 மாணவர்களிடம் பாட்னா சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

The post பீகார் மாநில அமைச்சர் ஒருவரே நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவரா? : திடுக்கிடும் தகவல்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: