காங்கிரஸ் கட்சியை கட்டிக்காக்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் விடாமுயற்சி பாராட்டுக்குரியது : செல்லூர் ராஜு மீண்டும் புகழாரம்!!

மதுரை : காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு ராகுலுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செல்லூர் ராஜு,”காங்கிரஸ் கட்சியை கட்டிக்காக்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் விடாமுயற்சி பாராட்டுக்குரியது. பாஜகவின் பி-டீம் அல்ல அதிமுக. பாஜகவுடன் எங்களுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை. வாக்கு வங்கியை தெரிந்து கொள்வதற்காக விக்கிரவாண்டியில் பாமக போட்டியிடுகிறது. 2026ல் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு பெரும்பான்மையை நிரூபிக்கட்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக செல்லூர் ராஜூ காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் வீடியோவை வெளியிட்டு, “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” எனக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் விடியோவை பகிர்ந்திருந்தார். ஆனால் இது அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்களை எழுப்பியதை அடுத்து செல்லூர் ராஜு அந்த பதிவை நீக்கினார். அந்த வீடியோவானது கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ராகுல் காந்தி அங்குள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று மக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது கல்லூரி மாணவிகளின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். ராகுல் காந்தியின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

The post காங்கிரஸ் கட்சியை கட்டிக்காக்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் விடாமுயற்சி பாராட்டுக்குரியது : செல்லூர் ராஜு மீண்டும் புகழாரம்!! appeared first on Dinakaran.

Related Stories: