ராகுலின் சுவாரஸ்ய பதிவு.. ஸ்வீட்ஸ் பாக்ஸுக்காக காத்திருக்கிறேன்.. பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி..!!

டெல்லி: தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி, இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து பிறந்தநாள் விழாக்களை உற்சாகமாக கொண்டாடினர். மேலும் பல்வேறு தலைவர்கள் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வகையில் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார். ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின், கோவையில் தனக்கு ஸ்வீட் பாக்ஸ் வழங்கிய வீடியோ பகிர்ந்திருந்தார். இந்நிலையில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; வாழ்த்துக்கு நன்றி சகோதரரே. மேலும், இன்றைய தினம் தனக்கு ஸ்வீட்ஸ் பாக்ஸ் வரும் என காத்திருப்பதாகவும் ராகுல் காந்தி சுவாரஸ்யமாக பதிவிட்டுள்ளார்.

 

The post ராகுலின் சுவாரஸ்ய பதிவு.. ஸ்வீட்ஸ் பாக்ஸுக்காக காத்திருக்கிறேன்.. பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி..!! appeared first on Dinakaran.

Related Stories: