முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40வது முறையாக நீட்டிப்பு..!!

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40வது முறையாக ஜூன் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ள நிலையில், ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளது.

புதிய மனு

இதற்கிடையே, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீதான உத்தரவை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் இன்று புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வங்கி ஆவணங்கள் தொடர்பாக தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதால் தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும்’ என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது நீதிமன்ற காவலானது இன்றைய தினம் முடிவடைந்ததை அடுத்து புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அல்லி அமலாக்கத்துறை இந்த மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூன் 25-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலமாக 40-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40வது முறையாக நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: