டல்கோனா ஓல்டு ஸ்டைல் மாமூ... குப்பை தொட்டிதான் இப்போ டிரென்ட்

மெல்போர்ன்: கொரோனா ஊரடங்கு அமலில், பொழுதை கழிக்க என்னவெல்லாம் செய்யணுேமா அதை எல்லாம் மக்கள் செய்துக் கொண்டிருக்கின்றனர். டல்கோனா காபியை தயாரித்து, அதை வாட்ஸ்அப்பில் வெளியிடுவது பேஷனாக இருந்தது. இப்போது சுத்தத்தை பராமரிக்க வலியுறுத்தும் வகையில், குப்பை தொட்டியை சுத்தம் செய்து அதனுடன் போஸ் கொடுப்பது ஸ்டைலாக மாறி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளில் ஊரடங்கு உத்தரவு, முழுவதுமாகவோ அல்லது பகுதி அளவோ அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

வீட்டில் அவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுப்போக்கு செல்போனும், அதனுடனான சமூக வலைதள தொடர்புகளும்தான். விதவிதமான சேஷ்டைகளை செய்து போட்டு கொண்டிருந்தவர்கள் மத்தியில் டல்கோனா காபியை தயாரித்து, அதை சமூக வலைதளத்தில் வெளியிடுவது திடீரென பேஷனானது. காபி நன்றாக இருக்கிறதா, பால் காய்ச்சப்பட்டிருக்கிறதா என்று தெரிகிறதோ இல்லையோ.... ஆளாளுக்கு கோப்பைகளை தூக்கிக் கொண்டு காபியை போட ஆரம்பித்துவிட்டனர். இந்த பேஷன் இப்போது மறைந்து புது டிரென்ட் வர ஆரம்பித்துள்ளது.

இதை ஆரம்பித்து வைத்துள்ளவர்கள் ஆஸ்திரேலியர்கள். அதாவது சுத்தம் சுகம் தரும் என்பது தமிழ் பழமொழி. அதைத்தான் அவர்கள் நவீன முறையில் வலியுறுத்தும் பேஷனை ஆரம்பித்துள்ளனர். அதாவது தங்கள் வீடுகளில் இருக்கும் குப்பை தொட்டிகளில் இருக்கும் குப்பைகளை உரிய இடத்தில் அகற்றிவிட்டு, அந்த குப்பைத் தொட்டியுடன் தங்களுக்கு பிடித்த ஆடைகளில் போட்டோ எடுத்துக் கொண்டு அதை சமூக வலைதளங்களில் போட்டு லைக் பெறுவதுதான் அந்த டிரண்ட்.

உலகத் தலைவர்கள் முதல் உள்்ளூர் தலைவர்கள் வரையிலும், பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்கள், நடிகர், நடிகைகளின் உடைகள் என்று பல்வேறு உடைகளில் ஏராளமானவர்கள் படங்களை போட ஆரம்பித்துள்ளனர். இதில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் போட்டிபோட்டுக் கொண்டு படங்களை பதிவேற்ற ஆரம்பித்துள்ளனர்.

என்ன கொடுமைடா சாமீ... என்கிறீர்களா? வேறு வழியில்லை. மே 3 வரையில் இதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

Related Stories: