பேரவை முற்றுகை போராட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரி பொதுநல வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: இஸ்லாமிய அமைப்புகள் வரும் பிப்ரவரி நாளை நடத்த திட்டமிட்டுள்ள சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை  வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் சட்டபேரவை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதற்கு தடை விதிக்ககோரி கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த வராகி  என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.அந்த மனுவில்,  குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சென்னை வண்ணாரப்பேட்டையில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இச்சட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவளிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் ல் பிப்ரவரி 19ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள  தலைமை செயலக முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: