என்டிஏ கூட்டணி மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

சென்னை, பிப்.11: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மகளிர் அணியினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பிரச்னைகளை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மகளிர் அணி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் அதிமுக சார்பில் வளர்மதி, கோகுல இந்திரா, பாஜ துணை தலைவர் குஷ்பு, மகளிர் அணி மாநில தலைவர் கவிதா ஸ்ரீகாந்த் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வானதி சீனிவாசன் பேசுகையில், ‘நம் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான தேர்தல். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். இதே இடத்தில் நாம் வெற்றி விழாவைக் கொண்டாட வேண்டும்,’ என்றார்.

Related Stories: