கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக சீன - ரஷ்ய எல்லை மூடப்படும்: ரஷ்ய பிரதமர் மிஹைல் மிஷூஸ்தின் அறிவிப்பு

மாஸ்கோ: கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக சீன - ரஷ்ய எல்லை மூடப்படும் என ரஷ்ய பிரதமர் மிஹைல் மிஷூஸ்தின் அறிவித்துள்ளார். சீனாவின் Hubei மாகாண தலைநகர் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று கொடிய தொற்றுநோயாக மாறி சீனாவையும் கடந்து பல நாடுகளில் பரவி வருகிறது. சீனாவில் பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ‘சார்ஸ்’ வைரஸ் போன்று உலகம் முழுவதும் பரவுவதால் சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் முக்கிய நகரங்களுக்கு, விமானப் பயணிகள் போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்துள்ளன.

இந்த வைரசுக்கான அறிகுறி சாதாரண காய்ச்சலைப் போலவே இருக்கும் என்பதால், 14 நாள் வரை தனிமைப்படுத்தி பரிசோதித்த பின்னரே உறுதி செய்யப்படும். அதே போல வைரஸ் தொற்று உறுதியாகி, தீவிர சிகிச்சை அளித்தாலும் சிலரை காப்பாற்ற முடிவதில்லை. இந்த வைரசுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் பலர் வைரஸ் தாக்கிய அடுத்த 10 நாளில் உடல் நலம் மோசமடைந்து இறக்கின்றனர். இதன் காரணமாக உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன. பல நாடுகளும் இந்த வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களின் சீன கிளைகளை காலவரம்பின்றி பூட்டி உள்ளன.

ஊழியர்கள் தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டுமே சீனாவுக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தி உள்ளன. சீனாவில் இருந்து வருபவர்களால் வைரஸ் பரவுவதால், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் சீனாவுக்கு விமான சேவையை ரத்து செய்துள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக சீன - ரஷ்ய எல்லை மூடப்படும் என ரஷ்ய பிரதமர் மிஹைல் மிஷூஸ்தின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொடிய கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாட்டின் தூர கிழக்கு எல்லை மூடப்படும். இதனிடையே சீன நாட்டினருக்கு மின்னணு விசா வழங்குவதையும் ரஷ்யா நிறுத்தியுள்ளது. இந்த வார தொடக்கத்தில் ரஷ்யாவிற்கு வந்த சீன சுற்றுலா பயணிகள் தடுத்து திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: