முக்கிய நகரங்களில் ரெட் அலர்ட்

பாகிஸ்தானுடன் போர் பதற்றம் அதிகமாகி இருப்பதால், இந்தியா ராணுவத்தின் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முக்கிய நகரங்களில் உச்சக்–்கட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி,  மும்பையை குறி வைத்தும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என்ற முன்னெச்சரிக்கையில், இந்த இரண்டு நகரங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைகளின் அறிவுறுத்தலின்படி டெல்லி மெட்ரோ ரயில் போக்குவரத்து முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் உச்சக்கட்ட பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பல இடங்களில் ராணுவமும்,  போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், மும்பையிலும் விமான நிலையங்கள், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மக்கள் பீதியடைய தேவையில்லை என  சட்டசபையில் மகாராஷ்டிரா முதல்வர் பட்நவிஸ் நேற்று கூறினார். இது குறித்து நவி மும்பை போலீஸ் கமிஷ்னர் சஞ்சய் குமார் கூறுகையில், ‘‘மும்பை கடலோர பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: