திருவண்ணாமலை கோயிலில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Advertising
Advertising

அதன்படி இந்த மாதம் (தை) பவுர்ணமி நாளை மறுநாள் (ஞாயிறு) மதியம் 1.51 மணிக்கு தொடங்கி, மறுநாள் (திங்கள்) மதியம் 11.41 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: