திருவள்ளூர்: மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று அறிந்து கொள்ளும் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். மாநிலத்தில் உள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரில் சென்று அவர்களின் கனவுகள் அறியப்படும்.
