‘துரந்தர்’ படத்தை தாண்டிய ‘பார்டர் 2’

இந்திய திரையுலக வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்த போர் சம்பந்தப்பட்ட இந்தி படம், ‘பார்டர்’. ஜே.பி.தத்தா இயக்கிய இது 1997ல் வெளியானது. சன்னி தியோல், ஜாக்கி ஷெராஃப், அக்‌ஷய் கன்னா, சுனில் ஷெட்டி நடித்தனர். ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவான இது, ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்நிலையில், 28 வருட இடைவெளிக்கு பிறகு உருவான இதன் 2ம் பாகமான ‘பார்டர் 2’ படத்தில் சன்னி தியோல், வருண் தவான், தில்ஜித் டோசன்ஜ், அஹான் ஷெட்டி, மோனா சிங், சோனம் பஜ்வா, ஆன்யா சிங் நடிக்க, அனுராக் சிங் இயக்கியுள்ளார். கடந்த 23ம் தேதி வெளியான இதில், பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகள் மற்றும் காட்சிகள் இருப்பதாக சொல்லி பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, அரபு அமீரகம் உள்பட 6 மத்திய கிழக்கு அரபு நாடுகள் தடை விதித்தன. ஏற்கனவே இந்த காரணத்துக்காக, கடந்த டிசம்பர் 5ம் தேதி இந்தியில் வெளியான ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ என்ற படமும் வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், ‘பார்டர் 2’ படம் 130 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories: