‘இறுதிபக்கம் ‘ இயக்குனரின் புதிய படம் !

பரபர திரில்லர் திரைப்படமாக வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற படம் ‘ இறுதிப்பக்கம்’. அந்தப் படத்தை அடுத்து இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், த்ரில்லர் கதையை மீண்டும் இயக்க இருக்கிறார். இன்சோம்னியாக் ட்ரீம் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அபிஷேக் ஜோசப் சத்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். “தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத புதிய தளத்தில், புதுவிதமான அனுபவத்தைத் தரும் த்ரில்லராக இது உருவாகிறது” என படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories: